Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெல்ஜிய நாட்டின் தலைநகரமான பிரஸ்ஸல்ஸ்சில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில் இரண்டு இடங்களில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இத்தாக்குதலில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளதாகவும் 35 பேர் வரை காயமடைந்ததாகவும் தெரியவருகின்றது. இத்தாக்குதலைத் தொடர்ந்து தலைநகரின் அனைத்து பொது போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் விமான நிலைய தாக்குதலைத் தொடர்ந்து மெட்ரோ நிலையம்மொன்றில் மூன்றாவது தாக்குதல் இடம்பெற்றதாகவும் அதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விமான நிலைய குண்டு வெடிப்பின் போது விமான நிலையத்திலிருந்து மக்கள் சிதறி ஓடிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த அசம்பாவிதங்களில் இதுவரை 23 பேர் பலியாகி இருக்கலாம் என உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடைபெற்ற மெட்ரோ நிலையத்திற்கு அண்மையிலேயே ஐரோப்பிய கமிஷன் தலைமையகம், மற்றும் ஐநா அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளதாக த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

பெல்ஜியத்தின் தலைநகரில் இன்று காலை நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் இதுவரை 35 பேர் வரையில் பலியாகியிருக்கலாம் எனவும், 135 பேர் வரையில், காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும், உள்ளுர் ஊடகத் தகவல்களை மேற்கோள் காட்டி, செய்திகள் வெளியாகியுள்ளன.

தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் கடும் பாதுகாப்புக்கும், சோதனைக்கும் உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், பொதுப் பொக்குவரத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சோதனை நடவடிக்கைகளின் போது , அரண்மனைப் பகுதியில் அனாதரவான பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அறிய வருகின்றது.

துயரமும் நிறைந்த பொழுதுகள் இவையெனவும், எது நடைபெறும் என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்தோமோ அது நடைபெற்றுவிட்டது எனவும், பெல்ஜியப் பிரதமர் ஷார்ல் மிஷேல் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்ச் அதிபர் ஒலாந்  இத் தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிக்கையில், சர்வதேச அளவில்  எழுந்துள்ள  அச்சுறுத்தலில் வெளிப்பாடே இத் தாக்குதல்கள் எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.

0 Responses to பெல்ஜிய விமான நிலையம் ,மெட்ரோவில் தாக்குதல்! பலர் பலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com