Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக கடல் வளங்கள் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்த பேராசிரியர் விஸ்வா வர்ணபால காலமானதையடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவுள்ள கூட்டு எதிரணி உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, ஜீ.எஸ். பீரிஸ் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணிக்கு, முக்கிய பதவியாக கருதப்படும் பொதுச்செயலாளர் பதவியை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரில்லை. எனவேதான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராகச் செயற்படும் மஹிந்த அமரவீரவுக்கு அதை வழங்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

0 Responses to ஐ.ம.சு.கூ பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்படலாம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com