பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துகள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் (PRECIFAC) செயலாளராக பதவி வகித்த லெசில் டி சில்வாவின் பதவி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது குறித்து அவருக்கு எழுத்து மூலமான அறிவிப்பொன்றை ஜனாபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆணைக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு வடத்திற்கு நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி அனுமதியளித்து, அதனை எதிர்வரும் 2017 மார்ச் 03 வரை, மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டப்ளியூ.குணதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Responses to பாரிய ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து லெசில் டி சில்வா நீக்கம்; எச்.டபிள்யூ.குணதாச இணைப்பு!