குருநாகல் குளியாப்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் முதலாம் தரத்தில் அனுமதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளான் என பரவிய வதந்தியைடுத்து தொடர்ந்து சில நாட்களாக மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடத்தை, இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் உயரதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தப் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய போதிய அறிவு இலங்கை மக்களுக்கு இருக்கின்றபோதிலும், வீண் பயமும் வதந்தியுமே குளியாப்பிட்டிய சம்பவத்திற்கு பிரதான காரணமாக அமைந்ததாக தேசிய பாலியல் தொற்று மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் டாக்டர் வீரசிங்க பி.பி.சி.யிடம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.
எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இலங்கையில் இருக்கின்றனர் எனவும், அவர்கள் முறையாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், அவர்களால் பிறருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எச்.வி.ஐ. தொற்று வதந்தியால் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்புவதை தவிர்த்துள்ள மக்களுக்கு மேலதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் டாக்டர் வீரசிங்க கூறியுள்ளார்.

0 Responses to மாணவனுக்கு எச்.ஐ.வி தொற்று எனும் வதந்தியால் குருநாகல் பாடசாலையொன்றில் தொடரும் சிக்கல்!