இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தீர்ப்புச் சொல்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. அவர்களின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் மாவட்டத்துக்கான அமர்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அமர்வு முடிவடைந்தப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தொழில்நுட்ப உதவிகள் தேவை எனில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு, சர்வதேச அவதானிப்பாளர்கள் தேவை எனில் கேட்கலாம். ஆனால், எமது மக்களுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதை ஏற்க முடியாது என்று மக்ஸ்வெல் பரணகம மேலும் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளின் தீர்ப்பு செல்லாது; ஏற்கமாட்டோம்: மக்ஸ்வெல் பரணகம