விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயக்கம் காட்டினோம் என்று பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன் கூறியுள்ளார்.
விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து,முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இல.கணேசன் தமது கருத்துக்களைக் கூறியுள்ளார். அதில், விஜயகாந்த் இப்போது கூட்டணிக் குறித்து அறிவித்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். மேலும், இனி நாங்கள் எங்களது பணியைக் கவனிப்போம் என்றும், இதுக் குறித்துப் பெரிதான விமர்சனம் ஒன்றுமில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நாங்கள் மறுக்கவில்லை, தயக்கம் கட்டினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் இதுக்குறித்துக் கூறுகையில், தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து உள்ளதால் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார். இன்று பவுர்ணமி நாளில் தேய்பிறைக்கான அடிக்கல் நாட்டியுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயக்கம் காட்டினோம்: இல.கணேசன்