Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வைகோவின் உண்மை முகம் இன்று தெரிந்தது என்று தமிழருவி மணியன், மக்கள் நலக் கூட்டணி தேமுதிக இணைந்துக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வாரிசு குடும்ப அரசியல் திமுக செய்கிறது என்று குற்றம் சாட்டிப் பிரச்சாரம் செய்து வந்த வைகோ, இப்போது தேமுதிகவுடன் இணைந்து உள்ளாரே தேமுதிக வாரிசு குடும்ப அரசியல் செய்யவில்லையா என்று தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாற்று அரசியலை உருவாக்கி ஆட்சி அமைப்போம் என்று கூறிய வைகோ, இப்போது அதிமுகவுக்கு கட் அவுட் கலாச்சாரத்திலும், தலைமைக்கு துதி பாடும் வழிமுறையிலும் சற்றும் சளைக்காத தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் இது எந்தவகை மாற்று அரசியல் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

20 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ள வைகோ, இதுவரை உண்மை முகம் தெரியாதபடி வலம் வந்தார் என்றும் இப்போது அவரது முகத்திரை கிழிந்து உண்மை முகம் தெரிய வந்துள்ளது என்றும் தமிழருவி மணியன் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to வைகோவின் உண்மை முகம் இன்று தெரிந்தது: தமிழருவி மணியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com