Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போரினை வெற்றி கொண்டாலும் சமாதானத்தினை வெற்றி கொள்ள முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்க குமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள உள்ளக நல்லிணக்க அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ‘தேசிய நல்லிணக்கத்திற்காக ஊடகங்களின் கூட்டுப்பணி’ எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது, “போரினை வெற்றி கொண்டாலும் அதன் பிரதிபலனாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், அதனை நடைமுறைப்படுத்தி செல்வதற்கும் முடியவில்லை.

அண்மைய காலங்களில் அதிகாரிகளினால், இனங்களுக்கிடையில் மனமுறிவு மற்றும் ஒற்றுமையின்மையை வளர்ச்சியடையச் செய்வதற்காக ஆதரவு வழங்கியதை காணக்கூடியதாக இருந்தது. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை விருத்தி செய்வதற்கு, நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, கல்விக்காக என செய்ய வேண்டிய பணிகள் பாரிய அளவில் இருக்கின்றன. அபிவிருத்தியின் ஊடாக அதற்கு பங்களிப்பு செய்ய முடியும்.

புலம்பெயர் தமிழர்கள் குழுவொன்று அண்மையில் என்னை உள்ளிட்ட குழுவினருடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியது. வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.” என்றுள்ளார்.

0 Responses to போரை வென்றாலும் சமாதானத்தைப் வெற்றி கொள்ள முடியவில்லை: சந்திரிக்கா குமாரதுங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com