போர்க்காலத்தில் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்களே. அவர்களுக்கு (பெண்களுக்கு) எதிராக வன்புணர்வை போராயுதமாக பல தரப்பினரும் கையாண்டு வருகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பெண்களின் குரல் எனும் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசும் போதே வடக்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “போர் நடக்கும் இடங்களில், போர் நடந்து முடிந்த வலையங்களில் பெண்கள் பாடு மிக மோசமாக அமைந்திருப்பதையும் நாங்கள் மறந்து விடக் கூடாது.
போர்க்காலப் பாதிப்பு பெண்களுக்கே மிகக் கொடூரமாக அமைகின்றது. அதே நேரம் சமாதான சூழலை ஏற்படுத்த முன்னிற்பவர்களும் பெண்கள்தான். இன்று போரானது, அதன் தார்ப்பரியமானது முற்றாகவே மாறிவிட்டது.
கிராமங்களே போரின் உக்கிரத்தைத் தாங்க வேண்டிய இடங்களாக மாறியுள்ளன. அது மட்டுமல்லாமல் போரில் மடிந்து போகின்றவர்கள் போர்வீரர்களே என்பதிலும் பார்க்க சாதாரண குடிமக்களேயாவார். அவர்களுள் பெரும்பான்மையினர் பெண்கள். அது மட்டுமல்லாமல் வன்புணர்வானது போரின் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே; வன்புணர்வு ஆயுதமாக கையாளப்படுகின்றது: சி.வி.விக்னேஸ்வரன்