Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரிய யுத்த நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் அதை மீறும் தரப்புக்கள் மீது கால தாமதம் இன்றி அமெரிக்கா உடனே உரிய சட்ட திட்டங்களின் படி செயற்பட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ரஷ்யா மறுபடி தலையிட நேரிடும் எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

அண்மையில் சிரிய யுத்த நிறுத்தம் தொடர்பில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்த சமயத்தில் சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கையில் ரஷ்யாவுடன் இணைந்தே அமெரிக்கா செயற்பட ஒத்துக் கொண்டிருந்ததாகவும் ஆனால் தற்சமயம் அமெரிக்கா பின்வாங்கிக் கொண்டிருப்பதாகவும் ரஷ்யா வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் மூத்த ரஷ்ய படைத் தளபதி ஒருவர் கருத்துத் தெரிவித்த போது, 'சிரிய யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஏற்படும் கால தாமதம் அங்கு உயிர்ப் பலிகளை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது, வெகு அண்மையில் அதாவது இப்பேச்சுவார்த்தை ஆரம்பித்த பின்னர் மட்டும் அலெப்போவில் 67 பொது மக்கள் போராளிகளால் சுட்டுக் கொல்லப் பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.' என்றுள்ளார்.

திங்கட்கிழமை லெப்டினண்ட் ஜெனரல் செர்கெய் ருட்ஸ்கொய் ஊடகங்களுக்கு அளித்த தகவலில் கடந்த வாரம் அமெரிக்கா கூட்டாக ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்து செயற்பட மறுத்து விட்டதாகவும் இதனால் ரஷ்யா தனது அதிகாரத்தை பாரபட்சம் இன்றி உபயோகிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் ரஷ்யா சிரியாவில் இருந்து தனது யுத்த விமானங்கள் சிலவற்றை மீளப் பெற்றுக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவரது அறிக்கைக்கு அமெரிக்கா தரப்பில் உடனடிப் பதில் இன்னமும் வெளியாகவில்லை. பெப்ரவரி 27 இல் அமெரிக்க மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் சிரிய யுத்த நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இதில் ISIS போராளிகளோ அல்லது அல்கொய்தாவுடன் தொடர்புடைய நுஷ்ரா ஃப்ராண்ட் என்ற குழுவோ உள்ளடக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரிய யுத்த நிறுத்தத்தை ஸ்திரப் படுத்துவதில் அமெரிக்கா தாமதம்!: ரஷ்யா குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com