முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒரு கொலைகாரர் என்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஒரு கொள்ளைக்காரர் என்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றி தாம் ஒருபோதும் தவறாக விமர்சித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நாரஹெண்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளதாவது, “அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தி, கொள்ளையிட்ட பஷில் ராஜபக்ஷ பற்றியும், வெள்ளைவான் மூலம் பல மக்களை கடத்தி கொன்றுகுவித்த கொலையாளியான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பற்றியுமே நான் விமர்சித்து வந்தேன்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மதிப்பிற்குரிய ஒருவர். அவரை இந்த நிலைக்கு தள்ளியது பஷிலும், கோத்தபாயவும் தான். மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் பேச்சைக் கேட்டு அதற்கேற்ப நடந்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷவே இன்றும் ஜனாதிபதி.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருடனோ, கொள்ளையடிப்பவரோ அல்லது கப்பம் பெறுபவரோ இல்லை. அவரால் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென நாம் நம்புகிறோம். ஆகவே நாட்டை கொண்டுசெல்ல அவருக்கு இடமளிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to கோத்தபாய கொலைகாரர் - பஷில் கொள்ளைக்காரர்: மேர்வின் சில்வா