மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான கிங் ஃபிஷர் இல்லம் ஏலம் விடப்பட்டுகிறது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல ஆயிரம் கோடி கடன் தொகை செலுத்த வேண்டிய இக்கட்டில், லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். அமலாக்கப் பிரிவு இவரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. ஹைதராபாத் நீதிமன்றம் இவர் பிணையில் வர முடியாத படியான பிடிவாரன்ட் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அவர் கைது செய்யப்படுவாரா, அல்லது அமலாக்கத்துறை உத்தரவுக்கு இசைந்து நேரில் வருவாரா என்கிற பல சந்தேகங்கள் உள்ளன.
இந்நிலையில் பாரத் ஸ்டேட் வங்கிக்கு 9 கோடி ரூபாய் அளவு கடன் தொகையை விஜய் மல்லையா செலுத்தாமல் பாக்கி வைத்து இருப்பதால், அவருக்குச் சொந்தமான கிங் ஃபிஷர் இல்லத்தை ஆன் லைன் மூலம் ஏலம் விட குறைந்த பட்ச ஆரம்பத் தொகையாக 150 கோடி ரூபாய் நிர்ணயித்து ஏலத்தைத் துவங்கி உள்ளது பாரத் ஸ்டேட் வங்கி.

0 Responses to மும்பையில் விஜய் மல்லையா சொத்துக்கள் ஏலம்!