Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் கொழும்பு வெள்ளவத்தையில் காணிகள் வாங்கி வாழ்வது போல, சிங்கள மக்கள் வடக்கில் காணிகளை வாங்கி குடியேறலாம் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சர்வோதயம் அமைப்பின் யாழ்ப்பாண அலுவலக ஏற்பாட்டிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட ஆளுநர், நிகழ்வு முடிந்து வெளியில் வந்தபோது, 'அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு என்பவற்றுக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அது தொடர்பில் உங்கள் நடவடிக்கை என்ன?' என ஊடகவியலாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த ரெஜினோல்ட் குரே, “வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இன்னமும் எனக்குக் கிடைக்கவில்லை. அந்தப் பிரேரணை கிடைக்கப்பெற்ற பின்னர், அது தொடர்பில் கதைக்க முடியும். எங்கள் நாட்டில் உள்ள சட்டத்தின் பிரகாரம், பணம் இருந்தால் எவரும் எங்கும் காணிகளை கொள்முதல் செய்யமுடியும். விற்பவர் விரும்பினால், எவரும் எந்தப் பிரதேசத்திலும் காணிகளை கொள்முதல் செய்ய முடியும். அது, ஆக்கிரமிப்பு என்று அர்த்தப்படாது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் சிங்களவர்களும் காணி வாங்கி குடியேறலாம்: ரெஜினோல்ட் குரே

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com