Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம், சாவகச்சேரி மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சில இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாகவும், அந்த வீட்டிலிருந்த இளைஞர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை அங்கி ஒன்று, 4 கிளைமோர், 2 கிளைமோர் பற்றிரிகள், கைத்துப்பாக்கியின் ரவைகள் 100, சி - 4 வெடிமருந்துகள் 12 கிலோ என்பனவே குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வாளர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டைச் சுற்றி வளைத்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும், வீட்டிலிருந்த இளைஞர் முன்னாள் புலி உறுப்பினர் எனச் சந்தேககிப்பதாகவும் சாவகச்சேரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to யாழ். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com