Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விஜய் மல்லையா செப்டெம்பர் மாதத்துக்குள் முதல் தவணையாக நான்காயிரம் கோடி ரூபாய் தருவதாக .உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.

விஜய் மல்லையா பரத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்துள்ளார். இதுக் குறித்து வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா லண்டனுக்கு சென்றுவிட்டார்.லண்டனில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அவர் தங்கி உள்ளார் என்றும், தலைமறைவாக உள்ளார் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகின.

இவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரணையின் போது மல்லையா தரப்பிலிருந்து மூடி முத்திரையிட்ட கவர் நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.அந்த கவரில் உள்ள கடிதத்தில் முதல் தவணையாக 4 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் வங்கிகள் விஜய் மல்லையாவின் கடிதத்துக்கு என்ன பதில் அளிக்க உள்ளார்கள் என்று சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 2ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

0 Responses to விஜய் மல்லையா செப்டெம்பர் மாதத்துக்குள் நான்காயிரம் கோடி ரூபாய் தருவதாக பதில்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com