செவ்வாய்க்கிழமை அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற எகிப்து ஏர் விமானத்தைக் கடத்தி சைப்ரஸுக்குக் கடத்த முயன்ற நபர் தடுத்து நிறுத்தப் பட்டு கைது செய்யப் பட்டுள்ளதுடன் பயணிகளும் ஊழியர்களும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபர் தான் தற்கொலைக் குண்டு அங்கி அணிந்திருப்பதாகக் கூறியதும் உண்மையல்ல என்றும் அது வெறும் போலி பெல்ட் மாத்திரமே என்றும் தெரிய வந்துள்ளது.
21 வெளிநாட்டினர் மற்றும் 15 ஊழியர்கள் அடங்கலாக 81 பயணிகளுடன் பயணித்த குறித்த ஏர்பஸ் 320 ரக விமானத்தில் இந்தக் கடத்தல் சம்பவத்தின் போது யாரும் காயப் படுத்தப் படவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. விமான பைலட்டை மிரட்டி சைப்ரஸ் தீவிலுள்ள லர்னாகாவில் விமானத்தைத் தரை இறக்கச் செய்த கடத்தல்காரர் முதலில் பெரும்பாலான பயணிகள் வெளியேற அனுமதித்ததுடன் விமான நிறுவன அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதிக் கட்டத்தில் விமானத்தின் இரு பைலட்டுக்கள், ஓர் பணிப்பெண், பாதுகாவலர் மற்றும் 3 பயணிகள் என 7 பேரை பிடித்து வைத்திருந்த கடத்தல்காரர் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் விமானத்தைச் சுற்றி வளைத்த பின்னர் பயணிகள் அனைவரையும் விடுவித்து விட்டு சரணடைந்துள்ளார்.
கடத்தல் காரரின் பெயர் சைப் எல்தின் முஸ்தபா எனத் தெரிய வருகின்றது. இச்சம்பவம் காரணமாக சைப்பிரஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பில் சைப்பிரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்தாசியாட்ஸ் ஊடகங்களுக்கு அளித்த தகவலில் இக்கடத்தலுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் குறித்த நபர் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கலாம் மற்றும் சைப்பிரஸில் உள்ள தனது முன்னால் காதலியை சந்திக்கத் திட்டமிட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்ற போதும் அந்நபர் எகிப்து நாட்டிலுள்ள பெண் சிறைக் கைதிகள் விடுவிக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

0 Responses to எகிப்து விமானக் கடத்தல் உயிர்ச் சேதமின்றி முறியடிப்பு: சைப்ரஸுக்கு கடத்த முயன்றவர் கைது