தேமுதிகவுக்கான பாஜகவின் கதவுகள் மூடப்படவில்லை என்று தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான முரளிதர் ராவ் கூறியுள்ளார்.
பாஜக-தேமுதிக கூட்டணிக் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் இல.கணேசன், நேற்று முரளிதர் ராவ், தேமுதிகவுக்கான பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றும், எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்றும் கூறியிருந்தார். இதைத் தாமும் வழி மொழிவதாகவும், தேமுதிக எப்போது வேண்டுமானாலும் பாஜக கூட்டணியில் இணையலாம் என்றும், எங்களது பேச்சுவார்த்தை தொடர்ந்துக்கொண்டே இருக்கும் என்றும் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் பேசிய மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகோ, நாங்கள் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணையும் வரை காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.விஜயகாந்த் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருந்தாலும், சகோதரி பிரேம லதா திமுக, அதிமுக அல்லாத கட்சிகளை கூட்டணிக்காக வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்
எனவே, நாங்கள் தேமுதிக எங்களது கூட்டணியில் இணையும் வரை காத்திருப்போம் என்று கூறியுள்ளார். ஆனால், இவர்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கு தேமுதிக இன்னமும் எந்தவித பதிலும் கூறவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தேமுதிகவுக்கான பாஜகவின் கதவுகள் மூடப்படவில்லை:முரளிதர் ராவ்