புகையிலைப் பொருட்களில் விழிப்புணர்வு படங்களின் சதவிகித அளவைக் குறைக்கக் கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மத்திய அரசு புகையிலைப் பொருட்கள் பொட்டலங்களில் விழிப்புணர்வு புகைப்படங்களை 40 சதவிகிதத்தில் இருந்து 85 சதவிகிதம் என்று உயர்த்தி அச்சிட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதை வருகிற ஏப்ரல் மாதம் 1ம் திகதி முதல் அமல்படுத்த உள்ள நிலையில், புகையிலைப் பொட்டலங்களில் 50 சதவிகிதம் அளவு விழிப்புணர்வு புகைப்படங்களை அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
மத்திய அரசு இதை ஏற்க வேண்டாம் என்று கூறியுள்ள அன்புமணி, புகையிலைப் பொட்டலங்களில் 85 சதவிகிதம் விழிப்புணர்வு படங்கள் இடம்பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். புகையிலைப் பொருட்களால் உயிரிழப்பு அதிகரித்து வருவதையும் அவர் விளக்கமாக மேற்கோள் காட்டியுள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to புகையிலைப் பொருட்களில் விழிப்புணர்வு படங்களின் அளவைக் குறைக்கக் கூடாது:அன்புமணி