இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களின் பாதுகாப்புப் பொறுப்பினை நேற்று புதன்கிழமை முதல் முப்படையினர் கையேற்றுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய நேற்று காலை 06.00 மணி தொடக்கம் பாதுகாப்பு வழங்கும் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளருமான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளைச் சேர்ந்த முப்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் திடீர் திடீரென மூன்று தடவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை மற்றும் கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் சுமார் எட்டு மணி நேரத்திற்கு மேல் இருளில் மூழ்கியமை என்பவற்றை அடுத்து நாடு முழுவதிலும் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மின் உற்பத்திநிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களின் பாதுகாப்பிற்கு இராணுவத்தினை கடமையில் ஈடுப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தல்களை வழங்கியதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.

0 Responses to மின் உற்பத்தி நிலையங்களுக்கான பாதுகாப்பு முப்படையிடம் ஒப்படைப்பு!