நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) கொழும்பு ஹைட் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நடத்தவுள்ள பொதுக் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ருவிட்டர் தளத்தினூடு வெளியிட்டுள்ள தகவலொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 'பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாறாதீர்கள். நான் ஹைட் மைதானத்துக்குச் செல்வேன்.' என்று அவர் எழுதியுள்ளார்.
இதேவேளை, கூட்டு எதிரணி இன்று முன்னெடுக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், அதனை மீறி கலந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிரணியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வேன்: மஹிந்த ராஜபக்ஷ