Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக்கிழமை வத்திகானின் புனித பீட்டர்ஸ்  சதுக்கத்தில்  நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகையின் போது போப் பிரான்சிஸ் உலகம் முழுதும் தற்போது அச்சுறுத்தலாக இருக்கும் கண்மூடித்தனம் மற்றும் மோசமான வன்முறை, தீவிரவாதத்துக்கு எதிராக அன்பென்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெகு அண்மையில் தான் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல்ஸ் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் பலர் பலியாகி இருந்ததுடன் ஐரோப்பிய நாடுகளில் இது பாதுகாப்பு அச்சுறுத்தலை வலுப்படுத்தியும் இருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாதுகாப்பு மிகவும் பலப் படுத்தப் பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக ஈஸ்டர் சடங்குகள் நடத்தப் பட்டதுடன் இன்று ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினப் பிரார்த்தனை (Mass) இன் போதும் பல ஆயிரக் கணக்கானவர்கள் கூடி இருந்தனர். இப்பிரார்த்தனை முடிந்த பின் பொது மக்கள் மத்தியில் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தின் பசிலிக்கா பால்கனியில் இருந்து உரையாடிய போப் பிரான்சிஸ் நகரம் மற்றும் உலகம் என இரு பிரிவுகளில் தனது செய்தியைத் தெரிவித்தார். அதில் உலகத்துக்கான செய்தியில் தற்போது மக்கள் சமுதாயம் எதிர் கொள்ளும் வன்முறை, அநீதி மற்றும் உலகின் பல பாகங்களில் நிலவும் சமாதானத்துக்கான அச்சுறுத்தல் என்பவை குறித்து உரையாற்றினார்.

இதில் முக்கியமாக, 'கடவுள் அன்பென்ற ஆயுதம் மூலமாகத் தான் சுயநலத்தையும், மரணத்தையும் வெற்றி கொண்டார். எனவே எம்மாலும் இது நிச்சயம் முடியும் என்று உலகின் 1.2 பில்லியன் ரோமன் கத்தோலிக்க மக்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.

0 Responses to தீவிரவாதத்துக்கு எதிராக அன்பெனும் ஆயுதத்தைப் பயன்படுத்துக!:பாப்பரசரின் ஈஸ்டர் செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com