செவ்வாய்க்கிழமை பெல்ஜியத்தின் தலைநகர் புருஸ்ஸெல்ஸில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து தீவிரவாதிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஞாயிறு அரசின் உத்தியோகபூர்வ மறுப்பையும் மீறி பெல்ஜியத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய புருஸ்ஸெல்ஸில் ஒழுங்கு செய்யப் பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மீது போலிசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அவர்களைக் களைத்தனர். பெல்ஜியம் மட்டுமன்றி ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் தீவிரவாதத் தாக்குதல்கள் வருங்காலத்தில் இடம்பெறலாம் என்ற அச்சம் நிலவுவதால் செவ்வாய் தாக்குதல் தொடர்பான பெல்ஜியம் போலிசாரின் விசாரணை விரிவு படுத்தப் பட்டு ஏனைய நாட்டு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலிசாருடனும் இணைந்தே மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. இதுவரை மேற்கொள்ளப் பட்ட பதில் நடவடிக்கையில் புருஸ்ஸெல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய ஓர் அல்ஜீரிய நாட்டு குடிமகன் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ஜேர்மனியின் புலனாய்வுப் பிரிவுடன் கைகோர்த்தும் பெல்ஜியம் போலிசார் செயற்படுகின்றனர். பெல்ஜியத்துக்குள் மட்டும் 13 புதிய ரெயிடுகள் நடத்தப் பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை புருஸ்ஸெல்ஸ் விமான நிலையத்திலும் அதிவேக மெட்ரோ ரயில் ஒன்றினுள்ளும் வெடித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 3 தற்கொலைக் குண்டுதாரிகள் உட்பட 31 பொதுமக்கள் கொல்லப் பட்டும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் உள்ளனர். இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி உரிய உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்பதும் ஞாயிறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இந்த தாக்குதலுக்கும் ISIS போராளிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

0 Responses to பெல்ஜியம் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் போலிசாருக்கிடையே கலகம்!