நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மைக்காக தீர்க்கமான தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற “நச்சுத் தன்மையற்ற நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “மக்களுக்குப் பொருத்தமானவற்றைப் பெற்றுக்கொடுத்தலே நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் ஆட்சியாளர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் ஆகியோரின் கடமையாகும். நச்சுத் தன்மையற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டம் அவ்வாறானதொரு திருப்புமுனையாக உள்ளது.
நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் என்பவற்றை மேம்படுத்தலே எனது எதிர்பார்ப்பாகும். இதுவரை ஆட்சிசெய்த அனைத்து அரசாங்கங்களும் விவசாயத்தையும் விவசாயிகளையும் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும் விவசாயிகளை கடன்சுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முடியாது போயுள்ளது. விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல் மற்றும் சிறந்த விவசாயக் கொள்கையினை அறிமுகப்படுத்துதல் என்பன புதிய அரசின் நோக்கமாக உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டின் நன்மைக்கான தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுப்பேன்: ஜனாதிபதி