Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகிய இருவரும் வீட்டுச் சிறையில் உள்ளனர் என்று தகவல் வெளியாகி வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாட்சாப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சில அமைச்சர்களில் மிக முக்கியமான அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகிய இருவரின் பண்ணை வீடுகளில் ஏராளமான பண மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டது என்றும், இதனால் இவர்கள் இருவரையும் ஜெயலலிதா வீட்டுக் காவலில் வைத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன, இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது என்று கூறியுள்ளார்.

மேலும், தேசிய அளவில் ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும், இதை மறைத்து கண் துடைக்கும் விதமாக ஜெயலலிதா போடும் அரசியல் கபட நாடகம் இது என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். அதாவது முன்பு எப்படி சசிகலாவை ஒதுக்கி வைத்தாரோ. அப்படி இப்போது இவர்கள் இருவரையும் ஒதுக்கி வைப்பது போல ஒதுக்கி வைத்து தாம் ஊழலுக்கு எதிரானவர் என்று கபட நாடகம் போடுகிறார் என்று வைகோ மேலும் குறைக் கூறியுள்ளார். அதோடு அதிமுக, திமுக ஆகிய இருக்கட்சிகலுமே ஊழலில் திளைத்த கட்சிகள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ஒ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன் வீட்டுச் சிறையில் உள்ளனர்: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com