Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் சிறுநீரகக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பந்தோலி பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய நபர் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டு, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்காக 05 பேரை இலங்கைக்கு அழைத்து வந்திருப்பதாக குறித்த சந்தேகநபர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

0 Responses to இலங்கையில் சிறுநீரகக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் இந்தியாவில் கைது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com