Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்றமையை எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை நேற்று திங்கட்கிழமை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களை நடத்தும் பூரண அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கே உள்ளதாகவும், அதனால் கூட்டு எதிரணி (ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்) அவரைச் சந்தித்தாகவும் விமல் வீரவங்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாம் எமது பிரச்சினைகளைக் குறிப்பிட்டோம், அவர் தேர்தல்கள் அடிக்கடி பிற்போடப்படுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தினார். ஆனால் நாம் இங்கு வந்தது தேர்தல் பிற்போடப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அல்ல. எதுஎவ்வாறு இருப்பினும் அடிக்கடி தேர்தலை பிற்போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: விமல் வீரவங்ச

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com