Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கும் குறித்த பிரேரணை, அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள், மே மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகின்றது.

அதற்கு முன்னதாக, சிரேஷ்ட வழக்கறிஞர் லால் விஜநாயக்கவினால் தலைமை தாங்கப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான செயற்குழுவை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

0 Responses to புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் மே மாதத்தில் ஆரம்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com