தற்போது அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 12 பேர் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வைத்துக் கொண்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவி, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களில் பெருமளவான மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, குறிப்பிட்ட 12 பேரின் பெயர் விபரங்களையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, நிதியமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மதுபானசாலைகளுக்கான 45 அனுமதிப்பத்திரங்கள் நேரடியாக அரசியல்வாதிகளின் பெயர்களில் பெறப்பட்டுள்ளன. இவர்களில் தற்போது 12 பேர் அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். இவற்றில் குருணாகல் மாவட்ட அரசியல்வாதிகளினால் மாத்திரம் 13 அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன.

0 Responses to 12 அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள்!