யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள், அனைத்தும் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்பட இருந்தவை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை தொடர்பில், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மீள யுத்தம் தலைதூக்கப் போவதாக சிலர் எதிர்வு கூறி வருகிற போதும் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. நாளாந்தம் இவ்வாறு வெடிபொருட்களும் ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படுவதாகவும் இம்முறையே இவ்வாறு பரபரப்பாக பேசப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (வியாழக்கிழமை) ஊடகவியலாளர் மாநாட்டில் சாவகச்சேரியில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து வினவப்பட்டது. இதற்குப்பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
கருணாரத்ன ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்துள்ளதாவது, “துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆயுதங்கள் தினமும் மீட்க்கப்படுகின்றன. இம்முறை வெடிபொருட்கள் பிடிபட்டதால் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் எழவில்லை. தேசிய பாதுகாப்பு சிறந்த நிலையில் இருப்பதாலே இவ்வாறு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது . தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். தினமும் இவ்வாறு 10 ஆயுத மீட்புகள் 10 கைதுகள் என்பன இடம் பெறுகின்றன. இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் இறுதி விசாரணை அறிக்கையை இலகுவாக தயாரிக்க முடியும்.
இந்த அங்கிகள் ஜனாதிபதியை கொலை செய்ய கொண்டுவரப்பட்டதா வேறு தேவைகளுக்காக கொண்டு வரப்பட்டதாக என கற்பனையில் கூறிவிட முடியாது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கப் போவதாகவும் கூறுகின்றனர். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கினால் அதற்கு முகம் கொடுக்க தயாராக இருக்கிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!