Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் 60 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை எடுத்துச் செல்லாது, சாதாரண பயணிகள் விமானத்திலேயே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரிவினருடன் சென்று வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அரசியல்வாதிகளைப்போன்று அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.

வருடாந்த இலக்குகளை அடைந்துகொள்வதற்கு வருடத்தின் ஆரம்பம் முதலே பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தையும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிதி ஒழுக்கமும் சிறந்த முகாமைத்துவமும் பேணப்பட வேண்டும்."என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் 60 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com