கூட்டு எதிரணியிடம் (மஹிந்த ஆதரவு அணி) உருப்படியான திட்டங்கள் ஏதும் கிடையாது. அவர்கள் ஆட்சியமைக்கப் போவதாக காண்பது பகல் கனவு என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமது குடும்பத்தினர் மீதான வழக்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் முன் தோன்றுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவரால் அரசாங்கம் அமைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவை தலைமைத்துவப் பயிற்சி செயற்திட்ட நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to கூட்டு எதிரணியிடம் உருப்படியான திட்டங்கள் இல்லை; அவர்களின் ஆட்சிக்கனவு பலிக்காது: ராஜித சேனாரத்ன