Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு வெள்ளவத்தையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களில், ஆறு பேரின் சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கடந்த மாதம் 4ஆம் திகதி மேற்படி இந்தியர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களில் அறுவரது சிறுநீரகங்களே அகற்றப்பட்டுள்ளன என்று சோதனைகளின் போது தெரியவந்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

மேற்படி இந்தியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ஒரு சிறுநீரகம் ஐந்து இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு தாங்கள் விற்றதாகவும், இருப்பினும் அந்தத் தொகை இதுவரையில் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியதாக பொலிஸார், நீதிமன்றத்தில் கூறினர்.

இச்சந்தேகநபர்களிடமிருந்து 286 ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் அவற்றை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்திய பொலிஸாரிடம் ஒப்படைத்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கிய கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், மேற்படி இந்தியர்கள் எட்டு பேரையும் இம்மாதம் 4ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

0 Responses to சிறுநீரக கடத்தல் உறுதியானது; சிறுநீரங்களை இழந்த ஆறு இந்தியர்கள் வாக்குமூலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com