தேமுதிக மாவட்ட செயலாளர்கள் நூறு கோடி ரூபாய்க்கு மேல் கட்சித் தலைமைக்கு தேர்தல் நிதி அளித்துள்ளனர் என்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலர் தினேஷ் கூறியுள்ளார்.
தினேஷ் இன்று தேமுதிகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்பாக திமுகவில் இணைந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் என்று அனைவரும் அதிமுகவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த நிலையில், அதிமுகவின் இரண்டாவது அணி என்று சொல்லப்படும் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்தது மன உளைச்சலைத் தருவதாக உள்ளது என்று தினேஷ் கூறியுள்ளார்.
மேலும், அரசியல் வரலாற்றில் இல்லாதபடி, தேமுதிக தேர்தல் செலவுக்கு, கட்சி நிர்வாகிகள், கட்சி செயலாளர்கள் 100 கோடி ரூபாய்க்கும் மேல் தேமுதிகவுக்கு நிதியாக அளித்துள்ளனர் என்றும், சிலர் வீடுகளை அடமானம் வைத்துக் கூட இந்த நிதியை அளித்துள்ளனர் என்றும் கூறியுள்ள தினேஷ், அவர்கள் அனைவருமே இப்போது மன உளைச்சலில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to தேமுதிக மாவட்ட செயலாளர்கள் நூறு கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் நிதி; தினேஷ்