தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அரசியல் நிலைப்பாடுகள் ஒன்றாக இருக்குமானால்; தமிழ்- முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது, “அதிகாரங்கள் அர்த்தமுள்ள விதத்திலே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்கின்ற அடிப்படை விடயத்தில் நாங்கள் ஒன்றாக நிற்கின்றோம்.
உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்டத்தில் கூட நாங்கள் எடுக்கவுள்ள நிலைப்பாடு ஒன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
நாங்கள் எடுக்கும் நிலைப்பாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் நிலைப்பாடும் ஒன்றாக இருந்தால்தான், தமிழ் சமூகம் வெற்றி கொள்ளும். முஸ்லிம் சமூகமும் வெற்றிகொள்ளும். இது எவ்வளவு பெரிய சவாலக இருந்தாலும் நாங்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் நிலைப்பாடு ஒன்றாக இருந்தால் தமிழ் பேசும் சமூகம் வெற்றிபெறும்: எம்.ஏ.சுமந்திரன்