Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்காத வகையில் எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல் பெறுமதி சேர் வரியில் (VAT) திருத்தம் கொண்டுவரப்படவிருப்பதாக இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மருந்துப் பொருட்களின் விலைகளில் பெறுமதி சேர் வரி தாக்கம் ஏற்படாதபோதும், தனியார் மருத்துவ சேவை வழங்குனர்களின் வரி அறவீடு அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. அதன்போதே, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு 11 வீதமாகக் குறைக்கப்பட்ட பெறுமதி சேர் வரி எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வரி அதிகரிப்பானது மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு ஏற்புடையது அல்ல. மக்கள் மீது பாரத்தை சுமத்தாத வகையில் வரி மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com