தமது தேவைக்கு ஏற்ப செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது தேமுதிக என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எப்போதுமே செய்தியாளர்களை அலுவலகத்துக்குள் தேமுதிக அனுமதிப்பதில்லை. இதில் விஜயகாந்துக்குச் சொந்தமான கேப்டன்
தொலைக்காட்சிக்கு மட்டுமே விதிவிலக்கு. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக செய்தியாளர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக நுழை வாயிலில் கூட அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், தேமுதிகவினுள் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டு, கட்சிக்கு எதிராக சந்திர குமார் அணியினர் போர்க்கொடி உயர்த்திய போது, நேற்று விஜயகாந்துக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் குரல் கொடுத்தனர். அப்போது மட்டும் செய்தியாளர்கள் மீண்டும் நுழைவு வாயில் வரை அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், இன்று மீண்டும் நுழைவு வாயிலில் தடுப்பு வைக்கப்பட்டு, மீண்டும் செய்தியாளர்களை அனுமதிக்க தேமுதிக அலுவலகம் மறுத்துள்ளது.தேவைக்கு ஏற்ப செய்தியாளர்களை தேமுதிக பயன்படுத்திக் கொள்கிறது என்று ஊடகங்கள், பத்திரிகைகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

0 Responses to தேவைக்கு ஏற்ப செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது தேமுதிக: குற்றச்சாட்டு