இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை- அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் இலங்கையில் பல்வேறு சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சமந்தா பவர் கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெற்று 16 மாதங்களில் இலங்கையில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ஆயினும், நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையுடனான உறவுகளுக்கு பராக் ஒபாமா முக்கியத்துவம்: சமந்தா பவர்