Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் இன்னமும் தண்டிக்கப்படாமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்தில், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

தர்மரத்தினம் சிவராம் 2005ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டார்கள். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயம் கிடைக்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று எல்லாம் வாக்குறுதிகள் வழங்கியிருந்தாலும், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

0 Responses to சிவராம் படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com