சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை கட்டியெழுப்பும் எதிர்கால வேலைத்திட்டத்தோடு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட இந்தப் புத்தாண்டில் உறுதிபூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்- சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, மானிட கௌரவத்தைப் பாதுகாக்கும்,கலாசாரப் பல்வகைத் தன்மையை மதிக்கும் ஐக்கியமிக்க மக்களாக இவ்வாண்டின் சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடக் கிடைத்தமையானது இலங்கையரான நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.
பாக்கியம்மிகுந்த சித்திரை மாதத்தில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் சூரியத் திருவிழாவானது இயற்கைக்கும் மனிதனுக்கும் மத்தியில் காணப்படும் அன்னியோன்ய உறவை அர்த்தமிக்கதாக மாற்றக் கூடியது.
சூரியபகவான் முதலான முழு இயற்கைக்கும் நன்றியைத் தெரிவிக்கும்,தேசிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் செழுமைப்படுத்தும் மிகப் பெரியகலாசாரத் திருவிழாவாகவும் இது கருதப்படுககிறது. புதியஅபிலாஷைகளுடனான வாழ்வை மனவுறுதியுடன் புதுப்பித்துக் கொள்ளக் கிடைக்கும் சிறப்பான சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது.
தற்போது அனைவருக்கும் சுதந்திரமாக புத்தாண்டைக் கொண்டாடக் கூடியதொரு சூழல் நாட்டிலேஉருவாகியுள்ளது. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இப்புத்தாண்டை எடுத்துக்கொள்கிறேன்.
பெற்றுக் கொண்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும்,சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கட்டியெழுப்பவும் இந்நன்நாளில் ஒன்றிணைந்து செயற்பட உறுதி பூணுவோம். அனைத்து இலங்கையருக்கும் சமாதானம்,மகிழ்ச்சி, சுபீட்சம்மிக்கதாக இப்புத்தாண்டு இது அமையட்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிய வேலைத்திட்டங்களோடு ஒன்றிணைவோம்; புத்தாண்டுச் செய்தியில் ரணில் தெரிவிப்பு!