Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக சக்திகளின் கடும் அழுத்தம் காரணமாக ஏப்பிரல் 26 செவ்வாய்க்கிழமை முதல் ஐ.நா தலைமையில் குவைத்தில் இடம்பெற்று வரும் யேமென் மற்றும் சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகளுக்கு இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை மீளவும் ஒழுங்கில் இடப் பட்டு நடைபெற்று வருகின்றது.

ஈரானின் பக்கபலத்துடன் யேமெனில் போரிட்டு வரும் ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகளின் ஆதரவுடன் மீளவும் அதிபர் பதவியைப் பெறும் முனைப்பில் சுன்னி அதிபர் அப்ட்-றப்பு மன்சூர் ஹதி ஆகியோர் கடந்த வாரம் முதல் யுத்த நிறுத்தம் மேற்கொண்டு குவைத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்ற போதும் ஏப்பிரல் 24 இல் சவுதி கூட்டணி நாடுகளின் விமானங்கள் யேமென் மீது பறந்ததால் இடை நிறுத்தப் பட்டிருந்தது. இந்நிலையில் தான் சர்வதேசம் தனது அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளது.

13 மாதங்களாக நீடித்து வரும் யேமென் உள்நாட்டுப் போரில் 6200 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளதுடன் 35 000 பேர் காயம் அடைந்தும் 2.5 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். மேலும் யேமெனில் அரசு பலவீனம் அடைந்து இருப்பது தொடர்ந்து நீடித்தால் அங்கு இயங்கி வரும் அல்கொய்தா கிளையான AQAP இன் அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to சர்வதேச அழுத்தம் காரணமாக யேமென் சமாதானப் பேச்சுவார்த்தை மீளவும் ஒழுங்கில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com