யுத்தத்தை நிறுத்துங்கள்! இனப் பாகுபாட்டை நிறுத்துங்கள்! எங்களுக்குத் தேவை இன்னமும் அதிக சாக்லெட்டும் ஐஸ் கிறீமும் தான். இக்கோரிக்கையை விடுத்து இருப்பவர்கள் உலகின் பட்டினியால் பொது மக்கள் வாடும் ஆப்பிரிக்க தேசமும் அண்மையில் உதித்த நாடுமான தென் சூடானின் தலைநகர் ஜுபாவின் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவியர் ஆவர்.
தென் சூடானின் புதிய பிரதி அதிபராகப் பதவியேற்றுள்ள கிளர்ச்சித் தலைவர் ரியெக் மாச்சர் ஜூபாவுக்கு திரும்பிய போது அங்கு வசிக்கும் மக்கள் வளமான எதிர்காலம், மற்றும் ஸ்திரமான பாதுகாப்பான தேசம் என்பவற்றைக் கனவு காண உரிமை உள்ளது எனவும் அதற்குத் தானும் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் தென் சூடானின் முதல் பிரதி அதிபராக மாச்சர் பதவி ஏற்றதன் மூலம் முதன் முறையாக தென் சூடானில் தேசிய ஐக்கியத்துக்கான இடைக்கால அரசை நிறுவும் வாய்ப்பும் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக தென் சூடானில் கிளர்ச்சிப் படைத் தலைவர் ரியெக் மாச்சருக்கும் அதிபர் சால்வா கீர் இற்கு சார்பான அரச படைகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. ஆனால் சர்வதேசம் இதில் தலையிட்டு அண்மையில் சமாதான ஒப்பந்தம் எட்டப் பட்டதை அடுத்தே ரியெக் மாச்சர் பிரதி அதிபராகப் பதவி ஏற்றுள்ளார். எனினும் இவருக்கும் அதிபர் சால்வா கீருக்கும் இடையே இன்னமும் பிணக்குத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தென் சூடான் மக்களுக்குத் தேவை சமதானமும் ஐஸ் கிறீமுமாம்!