ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்வர் பொறுப்பேற்ற மெஹ்பூபா முஃப்தி, அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்கிற பெருமையைப் பெறுகிறார்.
மக்கள் ஜனநாயகக் கட்சி-பாஜக கூட்டணியில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முஃப்தி முகமது சையத்,முதல்வராக ஆட்சி செய்து வந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் அவர் உயிரிழந்தார் முஃப்தி முஹமது சையத். இதையடுத்து அக்கட்சியின் தலைவராக அவரது மகள் மெஹ்பூபா முஃப்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலும், அம்மாநிலத்தில் முதல்வராக மெஹ்பூபா முஃப்தி பதவி ஏற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
கடந்த வாரம் பிரதமரை மெஹபூபா முஃப்தி சந்தித்த நிலையில், நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக பாஜக சார்பில் பிரதமர் கூறினார் என்று கூறப்படுகிறது.இதையடுத்து மெஹ்பூபா முஃப்தி அம்மாநில முதல்வராக பதவி ஏற்க
ஆளுநரிடம் உரிமை கோரியிருந்தார்.மாநில முதல்வரும் மெஹ்பூபா முஃப்திக்கு அழைப்பு விடுத்த நிலையில், இன்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக மெஹ்பூபா பதவி ஏற்றார்.முன்பு இருந்த அமைச்சரவையின் படியே இப்போதும் அமைச்சரவை அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் முதல்வரானார் மெஹ்பூபா முஃப்தி