வடக்கு மாகாண சபை முன்மொழிந்துள்ள அரசியலமைப்பு ஆலோசனைகள் உள்ளிட்ட தீர்வுத் திட்ட யோசனைகள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைது செய்யப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 50வது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போது, வடக்கு மாகாண சபை முன்மொழிந்த அரசியலமைப்பு ஆலோசனைகள் உள்ளிட்ட தீர்வுத் திட்ட யோசனைகள் தொடர்பில் திருத்தங்கள் இருந்தால் முன்மொழியுமாறு கோரப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிடும் போதே, சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாண சபையின் அரசியலமைப்பு ஆலோசனைகள் உள்ளிட்ட தீர்வுத் திட்ட யோசனைகள் வெளிவந்த பின்னர், வடக்கு மாகாண முதலமைச்சரை கைது செய்ய வேண்டுமென தென்பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
வடக்கு மாகாண முதலமைச்சரின் தனிப்பட்ட கருத்துக்களை வைத்து அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் முன்மொழியப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் இணைந்து தான் அரசியலமைப்பு தீர்வு திட்ட வரைபினை முன்மொழிந்தார்கள்.
முன்மொழிவுகள் வெளிவந்த பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தாக்குவதும், கைதுசெய்யுமாறு வலியுறுத்துவதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமன்றி இலங்கையில் உருவாக்கப்பட வேண்டிய மாநிலங்கள் பற்றி கூறுகின்றோம்.
இந்த அரசியலமைப்பு தீர்வுத் திட்ட வரைவு மாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டாக பேசி எடுத்த தீர்மானம். ஆகவே தனி மனிதனை இலக்கு வைத்து தாக்குவது தேவையற்றது. முதலமைச்சரை மட்டும் தாக்குவது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் 38 பேரையும் தாக்குவதாக அமைகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்யக் கோருவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல: சி.வி.கே.சிவஞானம்