Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பல்வேறு போராட்டங்களின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட சம்பூர் மக்கள் வாழ்வாதாரம் ஏதுமின்றி மிகையான கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு உடனடியாக அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு சம்பூரில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்து ஆண்டுகளின் பின்னர் ஆரம்பத்தில் 360 குடும்பங்களும், அதன் பின்னர் 546 குடும்பங்களுமாக மொத்தம் 906 குடும்பங்கள் சம்பூரில் மீளக்குடியேற்றப்பட்டன.

இவர்களில் 360 குடும்பங்களில் பெரும்பாலானோருக்கு மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பின்னர் குடியேறிய 546 குடும்பங்களுக்கு எந்தவிதமான உதவிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

தற்காலிக கொட்டில்களோ, மலசலகூட வசதிகளோ, குடிநீர் வசதிகளோ இல்லாது மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சுமந்தவர்களாக சுட்டெரிக்கும் வெய்யிலில் வாடி வதங்குகின்றனர்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகளும், முதியவர்களும், ஆண்களும், பெண்களும் சொல்லொணாத் துயர்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பூர் மகாவித்தியாலயம், சம்பூர் ஸ்ரீமுருகன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியன ஆரம்பித்து இயங்குகின்றன.

சம்பூர் ஸ்ரீமுருகன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டடங்கள் அழிவடைந்த நிலையில் தற்காலிக கொட்டிலில் இயங்குகின்றது.

இங்கு கற்கின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்கூட இல்லாத நிலையில் மாணவர்களின் கல்வி தொடர்வது வேதனையான விடயம் என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இத்தகைய நிலையைப் போக்க தனவந்தர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இக்குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டுமென்றும், உடனடியாக மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என அங்குள்ள மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to மீள்குடியேறிய பின்னர் யாரும் கண்டுகொள்ளாத சம்பூர் மக்களின் அவல நிலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com