வேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிடிவாதம் செய்துள்ளார்.
நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட உள்ளார்.அதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்யச் சென்ற விஜயகாந்த், அங்குள்ள அதிகாரிகளிடம் முதலில் வேட்பு மனுவை ஏற்கச் சொல்லி பிடிவாதம் செய்துள்ளார்.வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் மனுதாரர் உறுதி மொழியைப் படிப்பது வழக்கம். ஆனால், உறுதி மொழியை தாம் ஏற்றுக்கொண்ட பின்னர் வேட்பு மனு நிராகரிக்கப் பட்டால், ஏற்ற உறுதி மொழி வீணாகுமே என்பதால், முதலில் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டால் பின்னர் தாம் உறுதி மொழியை ஏற்பதாக விஜயகாந்த் பிடிவாதம் செய்துள்ளார்.
ஆனால், அதிகாரிகள் முதலில் உறுதி மொழியைத்தான் ஏற்க வேண்டும் என்று கூற, உடன் வந்தவர்கள் விஜயகாந்த்துக்கு எடுத்துக் கூற பின்னர் விஜயகாந்த் உறுதி மொழியை ஏற்று மனுத் தாக்கல் செய்ததாகத் தெரிய வருகிறது.

0 Responses to வேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பேன்: விஜயகாந்த்