தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கலாகி உள்ளன என்று தெரிய வருகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற மே 16ம் திகதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுப்பிடிக்கத் துவங்கி உள்ளது.கடந்த 25ம் திகதி தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்டவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் இன்று தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை ஆயிரத்து 61 மனுக்கள் தாக்கலாகி உள்ளன. இன்று அதிக பட்ச வேட்பு மனுக்கள் தாக்கலாகி உள்ளன என்கிற நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து சரியான தகவல்கள் பின்னர் தெரிய வரும். தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இதுவரை தாக்கலாகி உள்ளன..