கூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது என்று தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி என்ற பதத்திற்கு முக்கியமளித்து அதன் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக செயற்படும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள மேற்படி அமைச்சு, இத்தகைய செயற்பாடுகள் சமூக பாதிப்புக்கான முன்மாதிரியாக அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் நேற்று வியாழக்கிழமை அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த அறிக்கையில், “கூட்டு எதிர்க்கட்சி என்ற பதத்தைப் பயன்படுத்தி அதன் வளர்ச்சிக்கு உதவுவது சமூகத்துக்கு தேவையற்றதும் பாதிப்பு மிக்கதுமான முன்மாதிரியொன்றை ஏற்படுத்திவிடும்.
தற்போதைய அரசாங்கத்தில் ஆளும் தரப்பு எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்பன குறித்துதெளிவான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆளுங்கட்சியின் ஒரு சிலர் ஒன்றிணைந்து தங்களை கூட்டு எதிர்க்கட்சியினர் என்று அழைத்துக்கொள்வது பண்பாடற்றதும் சட்டவிரோதமானதுமான செயலாகும். அவ்வாறான சொற்பதத்தை பயன்படுத்தும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சடடத்தின் முன்னால் குற்றவாளிகளாகும் சந்தர்ப்பங்களும் நேரலாம்.
எனவே, நல்லாட்சியை முன்னிலைப்படுத்தி செயற்படும் இன்றைய அரசாங்கம் வழங்கியுள்ள ஊடக சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம் ” என்றுள்ளது.

0 Responses to கூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது: ஊடகத்துறை அமைச்சு