Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் கைதுகள் தொடர்பில் இன்னமும் அறிக்கை கிடைக்கவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன் பின்னரே இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரையில் 33 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும், கைதுக்கான காரணம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எதற்காக திடீர் கைது இடம்பெறுகின்றது? இதன் பின்னணி என்னவென பாதுகாப்புச் செயலாளரிடம் வினாவியபோது, இதற்குப் பதிலளித்த அவர், "கைது, விசாரணை ஆகிய நடவடிக்கைகளை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரே முன்னெடுத்து வருகின்றனர். இது பற்றி அவர்களிடமே விசாரிக்க வேண்டும். மேற்படி கைதுகள் தொடர்பில் எனக்கு இன்னும் அறிக்கை கிடைக்கவில்லை. கிடைத்த பின்னரே உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியும்'' என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கைதுகள் தொடர்பில் அறிக்கை கிடைக்கவில்லை: பாதுகாப்புச் செயலாளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com