Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட பின்னணியில், 66 உறுப்பினர்களைக் கொண்ட 6 உப குழுக்கள் நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டது.

இந்த உப குழுக்களில் 14 தமிழர்கள், 6 முஸ்லிம்கள் என சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்புப் பேரவையின் 2வது அமர்வு அதன் தலைவர் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நேற்றுக்காலை 09.30 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த உபகுழுக்கள் நியமிக்கப்பட்டது. அத்தோடு, அரசியலமைப்புப் பேரவையின் மேலதிக செயலாளராக ஹிரேஷா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்பு பேரவையின் உப குழுக்கள்

அடிப்படை உரிமைகள் உபகுழு: மஹிந்த சமரசிங்க (தவிசாளர்), அநுராத ஜெயரட்ண, பவித்ராதேவி வன்னியாராச்சி, விஜித ஹேரத், வாசுதேவ நாணயக்கார, அதுரலிய ரத்னதேரர், சிறிதரன், அரவிந்தகுமார், ஜயம்பதி விக்கிரமரட்ண, துஷிதா விஜயமான்ன, எம்.எச். எம். சல்மான்.

நீதி உபகுழு: ரவூப் ஹக்கீம் (தவிசாளர்), அநுர பிரியதர்ஷன யாப்பா, நவீன் திஸாநாயக்க, தலதா அத்துகோரள, சந்திம வீரக்கொடி, சுஜீவ சேரசிங்க, சிறியாணி விஜேவிக்கிரம, எம்.ஏ.சுமந்திரன், உதய கம்மன்பில, நளிந்த ஜயதிஸ்ஸ, சாந்தி சிறிஸ்கந்தராஜா.

நிதி உபகுழு: பந்துல குணவர்தன (தவிசாளர்), சரத் அமுனுகம, இராதாகிருஷ்ணன், அனோமா கமகே, ஹர்ஷா டி சில்வா, எரான் விக்கிரமரட்ன, முத்து சிவலிங்கம், கெஹலிய ரம்புக்வெல, சுனில் ஹந்துன்நெத்தி, ஈ. சரவணபவன், தாரகா பாலசூரிய.

சட்டம், ஒழுங்கு உபகுழு: சாகல ரட்ணாயக்க (தவிசாளர்), டபிள்யூ. டி.ஜே.செனவிரட்ன, பழனி திகாம்பரம், அமீர் அலி, அஜித் பி. பெரேரா, டக்ளஸ் தேவானந்தா, அநுரகுமார திஸாநாயக்க, எம்.எஸ்.தௌபிக், மாவை சேனாதிராஜா, நாமல் ராஜபக்ஷ, செஹான் சேனசிங்க.

பொதுச் சேவைகள் உபகுழு: சுசில் பிரேமஜயந்த (தவிசாளர்), கருணாரட்ன பரணவிதாரண, சந்திரசிறி கஜதீர, நிஷால் கலபதி, ஜெ.சி.அலவதுவல, அப்துல்லாஹ் மஹ்ப், ரமேஷ் பத்திரண, வேலுகுமார், முஜிபுத் ரஹ்மான், ஹர்சான ராஜரத்ன, ஞானமுத்து சிறிநேசன்.

மத்திய மற்றும் வெளிக்கள எல்லை உபகுழு: தர்மலிங்கம் சித்தார்த்தன் (தவிசாளர்), டிலான் பெரேரா, ஹரிஸ், டலஸ் அழகப்பெரும, பிமல் ரத்நாயக்க, விதுர விக்கிரமநாயக்க, திலகராஜ், சனத் நிஷாந்த பெரேரா, எஸ்.எம்.மரிக்கார், ரோஹினி குமாரி விஜேரத்ன, விஜேபால ஹெட்டியாராச்சி.

0 Responses to அரசியலமைப்புப் பேரவைக்காக 66 உறுப்பினர்களைக் கொண்ட 6 உப குழுக்கள் நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com