Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேகாலை, அரநாயக்கவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் 8 சடலங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் நேற்று மாலை வரையில் 82 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 127 பேர் காணாமல்போயுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், 3 இலட்சத்து 75 ஆயிரத்து 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 474 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன எனவும், 3 ஆயிரத்து 674 வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளன எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, 66 ஆயிரத்து 198 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 78 ஆயிரத்து 528 பேர் தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக 497 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to அரநாயக்கவில் இன்றும் 8 சடலங்கள் மீட்பு; நாடு பூராவும் இயற்கை அனர்த்தங்களில் 88 பேர் உயிரிழப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com